
முச்சக்கர வண்டியில் ஹெரோயின் கடத்திச் சென்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்குலான பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து தலா 67 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் பைக்கற்றுக்கள் 3500 மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (24) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.