
பொலிஸ் விசேட அதிரடிப்படை சிப்பாய் ஒருவர் பேலியகொட மத்திய மீன் சந்தை தொகுதியில் வைத்து தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியை பயன்படுத்தி இன்று (24) காலை குறித்த சிப்பாய் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே சிப்பாய் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.