
ஐக்கிய தேசியக்கட்சி கடந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதால் தாம் வெறுப்படையவில்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
தயாசிறி ஜயசேகர பொய்களை கூறி தேர்தலில் வென்றார். ஐக்கிய தேசியக்கட்சி உண்மைகளை கூறியதால் தனிமைப்படுத்தப்பட்டது.
ஜெர்மனியின் ஹிட்லர் உலகத்தில் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றவர். அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றவுடன் 61 நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைத்தார்.
யேசுநாதரை சிலுவையில் அறையுமாறு ஜெருசலேமில் உள்ள அதிகளவானவர்கள் கோஷமிட்டனர். அது தான் பின்னர் பெரும்பாலானோர் அவரை விரும்ப காரணமாக இருந்தது.
புத்த பகவானை இந்தியாவில் பலர் நிராகரித்தனர். எனினும் அவரே இந்தியாவில் அதிகமாக விரும்படுபவரானார்.
தற்போது தயாசிறி அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். முழு நாட்டுக்கும் பொய்களை கூறி அந்த வாக்குகளை பெற்றார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கற் பறை இருப்பதாகவும் கப்பல்கள் செல்ல முடியாது என்றும் கூறியஅவர் தற்பொழுது அங்கு கற் பாறை இல்லை என்கிறார்.
அத்துடன் கப்பல்கள் வராத துறைமுகம், விமான இறங்காத விமான நிலையம் ஆகியவற்றை நிர்மாணித்துள்ளதாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து அவர் இன்று அரசாங்கம் சிறந்தது என்றும் கூறுகிறார். இதனால் அவரது வெற்றியானது தற்காலிமானது என்றார்.