
எகிப்தில் பாதுகாப்புத் தரப்பிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக எகிப்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதுபோன்ற மோதல்களால் இதுவரை 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் உள்ள முஸ்லிம் சகோரத்துவக் கட்சியின் உறுப்பினர்களின் வீடுகளிலும் பாதுகாப்பு தரப்பினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி முஹமட் முர்சி இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து 100 பொலிஸார் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.