இன்று காலை 11.42 மணியளவில் இடம்பெற்ற நிலநடுக்கம் நேபாளத்தை மிக மோசமாக பாதித்துள்ளது.
இந்தக் கடுமையான நிலநடுக்கத்தினால் காட்மாண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து விழுந்தன.
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கம் காரமணாக ரோடுகள் சிதைந்து துண்டிக்கப்பட்டதால் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தலைநகர் காட்மாண்டு விமான நிலையமும் மூடப்பட்டது. காட்மாண்டு வந்த விமானங்கள் டெல்லிக்கு திருப்பி விடபட்டன.
காட்மாண்டுவில் உள்ள பழைய தர்பார் பகுதி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காட்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான “தரகரா” டவர் முழுமையாக இடிந்து விழுந்தது.
அக்கட்டிடத்தில் இருந்த நூற்றுக்கும் அதிகமான பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.ஒருவரின் உடல் மற்றும் கிடைத்து உள்ளது.
பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டிடம் 61.88 மீட்டர் உயரமானது. காட்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப்பகுதியில் 1832 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் அதன் கட்டிடக் கலைக்காக யுனோஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



























