பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையினாலும், தீர்க்கமான முடிவினாலும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தலைவர் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.
நேற்று மாலை கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முடிவு செய்ததை தலைவர் ஹக்கீம் பாராட்டியதுடன் இந்தத் தீர்மானத்தை உயர்பீடத்தைக்கூட்டி அறிவிக்கவுள்ளார்.
கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு கட்சித் தலைவருக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வந்தபோதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அசையாத நிலைப்பாட்டின் மூலம் அந்த சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.