நேற்று இரவு 11 மணியளவில் அமைச்சர் ரிஷாத்,பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி,வை எல் எஸ் ஹமீத் ஆகியோர் ஜனாதிபதியினைச் சந்திக்க அலறி மாளிகை சென்றுள்ளனர்.ஜனாதிபதி அங்கு இருக்கவில்லை அதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி,வை எல் எஸ் ஹமீத் ஆகியோர் விருந்தினரை உபசரிக்கும் அறைக்கு சென்றுள்ளனர். அங்கே மின்னல் நிகழ்ச்சி நடாத்தும் ரங்கா,மு.கா பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்,ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அங்கே காணப்பட்டதாகவும்.ஜே.ஸ்ரீ ரங்காவிற்கும் இடையில் கடும் வாய்க்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தனக்கு எதிராக முன்வைக்கப்படும் போலியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆதாரங்களை நிரூபிகிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிடம் அமைச்சர் றிசாத் உரத்துக் கத்தியுள்ளார். இதன்போது அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கும் இடையில் கடும் வாய்க்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்க்குவாதம் முற்றிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா மீது அமைச்சர் றிசாத் அரைந்ததுடன் தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளார். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ், நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோர் தலையீட்டு இந்தப் சண்டையினை முடிவுக்கு கொண்டுவந்தமை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு அரசியல் பிரமுகர் தெரிவித்தார்.
