டொரண்டோ: கனடா பார்லிமென்ட் அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். பார்லிமென்ட் அருகேயுள்ள தேசிய போர் நினைவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. பல முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக, அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் அரசு அலுவலகங்களை நோக்கி ஓடியதாகவும், தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சம்பவத்தில் ஒரு பாதுகாப்பு படைவீரர் இறந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.