
பொதுபல சேனாவின் செயலாளர் கங்கொடத்தே ஞானசார கராத்தே பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் படமொன்றை கொழும்பு டெலிகிராப் பிரசுரித்தமை தொடர்பில் அவர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் படத்தில் இருப்பது தான் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வெற்றுடம்பில் காவி லுங்கியோடு ஞானசாரர் மார்ஷல் ஆர்ட் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மேற்படி படத்தைப் பிரசுரித்திருந்த குறித்த இணையத்தளம் ” வெறுப்பை உமிழும் நட்சத்திரம் ஞானசாரர் அதிரடி நடவடிக்கையில்…” என்று அதற்கு தலைப்பும் இட்டிருந்தது.
இந்தப் படத்தின் இயற்கைத் தன்மை பற்றி தனக்குத் தெரியாது. தான் இதுவரையில் அதைப் பார்க்கவில்லை எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஞானசாரரின் கருத்தை ஆட்சேபித்திருக்கும் கொழும்பு டெலிகிராப் பிரதம ஆசிரியர் உவிந்து குருகுலசூரிய ,படத்தில் இருப்பது ஞானசார தேரர்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.