BREAKING NEWS

Aug 12, 2014

13ஆம் திகதி SLTJ இஸ்ரேலை கண்டித்து ஆர்பாட்டம், BBS இஸ்ரேல்க்கு ஆதரவாக ஆர்பாட்டம்?

Untitled

எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாடுதழுவிய ரீதியில் பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ள நிலைமையில் …

இப்போராட்டம் நடத்தப்படும் பட்சத்தில் அதே தினத்தில் இஸ்ரேல் நாட்டுக்கு அதரவாகவும் சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுபல சேனா அமைப்பு ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் “இது குறித்த இனம்மொன்றுக்கு எதிரான ஆர்பாட்டமல்ல” எனவும் இஸ்ரேலில் இலங்கையர்கள் இருபதாயிரம் பேர் தொழில் புரிவதாகவும் யுத்த காலங்களில் இஸ்ரேல் இலங்கைக்கு உதவியுள்ளது என்பதை கருத்தில் கொண்டும் குறித்த இஸ்ரேல் ஆதரவு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் இலங்கைக்கு பல தொழில்நுட்ப உதவிகளை வழங்கிவருவதாக குறிப்பிட்டுள்ள பொதுபல சேனா இலங்கை அரசாங்கம் சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிளந்த விதானகே அவர்களை  தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த ஆங்கில இணையதளத்தில் வெளியான செய்தி தமது அமைப்பு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வமான செய்தி என குறிப்பிட்ட அதேவேளை சீறி லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரால் இப்போராட்டம் நடத்தப்படும் பட்சத்தில் அதே தினத்தில் இஸ்ரேல் நாட்டுக்கு அதரவாகவும் சிறீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுபல சேனா அமைப்பு ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ள செய்தியை பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிளந்த விதானகே அவர்கள் சற்றுமுன் உறுதிப்படுத்தினார்..
மடவளை நியூஸ்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &