சுகாதார அமைச்சு, இலங்கை மருத்துவ நிர்வாகிகள் சங்கம் மற்றும் மதுபானம், போதைப் பொருள் தொடர்பான தகவல் மத்திய நிலையம் (அடிக்) ஆகியன இணைந்து இன்றைய தினத்தை (13.01.2014) புகைப்பிடித்தலை எதிர்ப்பதற்கான தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளன.
இத்தினத்தின் நிமித்தம் இன்றைய தினத்தில் சிகரட் உள்ளிட்ட புகைப்பிடித்தல் பொருட்களின் விற்பனையைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நாடெங்கிலுமுள்ள விற்பனை நிலையங்களை சுகாதாரக் கல்வி பணியகமும், அடிக் நிலையமும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
2014ஆம் ஆண்டை போதைப் பொருள் அற்ற ஆண்டாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று புகைப்பிடித்தலை எதிர்ப்பதற்கான தினமாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதுடன் புகைப்பிடித்தலை தவிர்ப்பதை வலியுறுத்தி ஊர்வலங்களும், சுகாதார கல்வி வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கும் பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை ஊடாக அறிவூட்டியுள்ளன.
புகைப்பிடித்தல் மற்றும் மதுபாவனைப் பழக்கத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டியே சுகாதார அமைச்சு இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
புகைப்பிடித்தல் பழக்கம் காரணமாக இந்நாட்டில் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் அது வருடமொன்றுக்கு 20 ஆயிரமாகக் காணப்படுகின்றது என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.
அத்தோடு இருதய நோய்கள், புற்று நோய்கள், ஆஸ்துமா போன்ற சுவாசத் தொகுதி நோய்களுக்கும் பெருந்தொகையானோர் உள்ளாகின்றனர். அத்தோடு குடும்பங்கள் வறுமைக்கு உள்ளாகவும் இவை பிரதான காரணியாக விளங்குகின்றன.
அதன் காரணத்தினால் இப்பேரழிவிலிருந்து எமது எதிர்காலப் பரம்பரையினரை பாதுகாக்கும் நோக்கில் செயற்படுத்தப்படுகின்ற இவ்வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு சகல கடை உரிமையாளர்களிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இத்தினத்தின் நிமித்தம் கொழும்பு ஏழிலுள்ள நெலும் பொக்குனவுக்கு அருகில் இன்று காலை 8.00 மணிக்கு ஊர்வலமொன்று விவகார மகாதேவி பூங்காவைச் சுற்றி இடம்பெறுகின்றது. இதில் பல்துறை சார்ந்தவர்களும் பங்குபற்றுகின்றனர்.