தென் மற்றும் மேல் ஆகிய இரு மாகாண சபைகளையும் கலைக்குமாறு கோரி அந்த மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஆளுநர்களிடம் கடிதங்களை கையளித்துள்ளனர்.
தென் மாகாண முதலமைச்சர் சாந்த விஜயலால் டி சில்வா தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவிடமும், மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவிடமும் கடிதங்களை கையளித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் 12 ஆம் திகதி நள்ளிரவுடன் இவ்விரு சபைகளும் கலைக்கப்படலாம் என்றும், அதன்பின்னர் இரு மாகாணசபைகளுக்குமான தேர்தல்களுக்கான திகதியை தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.