புறக்கோட்டை - போதிராஜமாவத்தையில் புதிதாக கட்டப்பட்ட கடைத் தொகுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் கடைத் தொகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 50 தற்காலிக வர்த்தக நிலையங்கள் இதனால் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.