
இலங்கை கால்பந்தாட்டக் கழகங்களின் கால்பந்தாட்ட வசந்தமாகக் கருதப்படும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன கால்பந்தாட்டப் போட்டித்தொடர் FA CUP 2013 கடந்த ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரம் ஆரம்பமாகியது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தில் பதிவூசெய்துள்ள சுமார் 173 அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டித் தொடரில் சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டக் கழகம் மீண்டும் தனது பிரவேசிப்பை உறுதிசெய்தள்ளது.
சுமார் 3 வருடங்களுக்கு முன்பு இப்போட்டித் தொடரின் ஒரு போட்டிக்கு முன்னறிவிப்பின்றி பங்குபற்றாமல் இருந்தமை மற்றும் அதற்கான நட்டஈட்டுத் தொகையை சம்மேளனத்துக்கு செழுத்தாமை ஆகிய காரணங்களினால் ஒரு வருடம் அணி ரத்து செய்யப்பட்டிருந்து பின்னர் தொடர்ந்து 2 வருடங்கள் வருடாந்த பதிவினை சம்மேளனத்தில் மேற்கொள்ளாமை போன்ற காரணங்களினால் 3 வருடங்கள் தொடர்ச்சியாக இப்போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாத் தரப் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் முதல் 16 அணிகளுக்குள் தெரிவாகிய பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணியினர் பின்னர் தமது திறமைகளை வெளிக்காட்டத்தவறியமையினால் பின் தள்ளப்பட்டு பின்னர் 3 வருடங்கள் போட்டிகளிலிருந்து விளக்கப்ட்டிருந்து மீண்டும் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம் அணியினருக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
அத்துடன் இரண்டாம் தரத்திலிருந்து மீண்டும் 3 தரத்துக்கு பின்னடைந்திருக்கும் இலவன் ஸ்டார்ஸ் அணியினர் இப்போட்டித் தொடர் மற்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் தொடங்கவூள்ள 3அம் தர கால்ப்பந்தாட்டத் தொடர் என்பவற்றில் அதிசிறந்த முறையில் திறமைகளை வெளிக்காட்டி மீண்டும் 2 தர அணிகளுக்குள் இம்பிடிக்க வேண்டும் என்பதே அனைத்து இலவன் ஸடார்ஸ் ஆதரவாளர்களினதும் பிரார்த்தனையாகும்.
FA கிண்ண போட்டித் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி புத்தளம் நிவ் ஸடார் விளையாட்டுக் கழகத்துடன் இடம்பெறவிருக்கின்றது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடர்ந்தும் முன்னேறிச் சென்று விட்ட இடத்தை மீண்டும் எட்டிப்பிடித்து தக்கவைத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல எமது வாழ்த்துக்கள்.