BREAKING NEWS

Nov 6, 2013

ஹலால் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க ஜப்பான் திட்டம்


ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, 2020 ல் ஹலால் உணவு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் தனது அரசாங்கத்தின் திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஜப்பானில் உணவு தேவை அதிகரித்து வரும் நிலையிலும் தமது நாடு, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய முஸ்லிம் நாடுகளில் அதன் ஹலால் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

2020ல் ஹலால் உணவு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையானது 10.3 பில்லியன் டாலர் மேலதிக வருமானத்தை நாட்டுக்கு பெற்றுத் தரும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

ஜப்பானீய அரசு, ஹலால் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அவற்றை மேம்படுத்தும் செயலாக்க வசதிகளுக்கான செலவினங்களில் பாதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க இணங்கியுள்ளது என்று குவைத் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஹலால் மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்கவே ஜப்பான் திட்டமிட்டுள்ளது. 

தற்போது ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகள் ஜப்பானிய மாட்டிறைச்சிக்கான பிரதான வாடிக்கையாளர்களாக இருக்கின்ற போதிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஜப்பான் ஹலால் இறைச்சி விற்பனை அதிக அளவில் அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரத்தில் சவுதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் மலேஷியா போன்ற நாடுகளுக்குமான ஏற்றுமதியை விரிவாக்கவும் ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &