BREAKING NEWS

Nov 3, 2013

மட்டு. கல்முனை பிரதான வீதியில் பாரிய பஸ் விபத்து



மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் பாரிய பஸ் விபத்தொன்று இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை. தனியார் பஸ் சாரதி ஒருவரே காயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &