BREAKING NEWS

Nov 30, 2013

இரண்டு பஸ்கள் மோதி விபத்து: 8 வயது சிறுவன் பலி

கத்மன - மாத்தறை பிரதான வீதியின் மீதெல்லவல பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். 

இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &