BREAKING NEWS

Nov 1, 2013

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நாளாந்த வருமானம் 40 இலட்சம்


கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை யினூடாக நாளாந்தம் 40 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியது. நாளாந்தம் 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் வீதியில் பயணிப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை நெடுஞ்சாலைகள் கட்டுப்பாடு மற்றும் நிர்வகிப்பு பிரிவு மேலதிக பணிப்பாளர் கஹடபிடிய கூறினார்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. முதல் 13 மணித்தியாலங்களில் 11 ஆயிரம் வாகனங்கள் வீதியைப் பயன்படுத்தியதோடு இதன் மூலம் 30 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் வாகன போக்குவரத்து மூலம் 42 இலட்சமும் மூன்றாவது நாளில் 40 இலட்சமும் வருமானம் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, சுமாராக நாளாந்தம் 40 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டப்படுவதாக கூறிய அவர் தூர இடங்களுக்குச் செல்லும் வாகனங்களும் நெடுஞ்சாலையை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார்.

25.8 மீற்றர் நீளமான கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்க 292 மில்லியன் டொலர் செலவிடப்பட்டது. இதனூடாக, 20 நிமிடங்களில் கட்டுநாயக்கவை சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &