BREAKING NEWS

Oct 5, 2013

இலங்கையில் பூகம்பம் அபாயம்

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் பூகம்பம் அபாயம் இருப்பதாக புவியியல் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க இலங்கையின் கடல் பகுதி மற்றும் நில நடுக்கங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இலங்கைக்குரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக பேராசிரியர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

புவியியல் காரணங்களினால் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம் காரணமாக இலங்கை பூகம்பங்கள் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து இந்த ஆபத்தான நிலைமை உருவாகியுள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் பூமிக்குள் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.

10 முதல் 12 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு ஏற்பட ஆரம்பித்ததுடன் தற்போது அது உள்ளுக்குள் பெரிய வெடிப்பாக மாறி வருகிறது என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &