காலி மீனவத் துறைமுகத்தில் ஐஸ் களஞ்சியசாலையொன்றில் திருத்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபரொருவர் வெடிப்பு சம்பவமொன்றில் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிலியந்தலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
அமோனியா வாயு நிறைத்து வைக்கப்பட்டிருந்த தாங்கி வெடித்ததனாலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
