
''ரணில் விக்ரமசிங்க எம்முடன் இணைந்தால் நான் எனது அமைச்சு பதவியினை அவருக்கு விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளேன்'' என அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தெரிவித்தார்.
புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ''ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதியாவோ, பிரதமராகவோ, அமைச்சராகவோ முடியாவிட்டால் எமது கட்சிக்கு வருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். ஆனால் பிரதமர் பதவி வழங்க முடியாது. நான் எனது அமைச்சினை அவருக்காக விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளேன்'' என மேலும் தெரிவித்தார்.