
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு இதுவரை 450 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த முறைபாடுகளில் 52 தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு குறிப்பிடுகின்றது.
குருநாகல் மாவட்டத்திலேயே கூடுதலான முறைபாடுகள் கிடைத்துள்ளதுடன், அந்த மாவட்டத்தில் இதுவரை 107 முறைபாடுகள் பதிவாகியுள்ளன.
அரசாங்க வளங்களின் முறையற்ற பயன்பாடு தொடர்பிலேயே அதிகளவிலான முறைபாடுகள் கிடைத்திருப்பதுடன், அதிலும் அரசாங்க உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் குறித்து பதிவாகியிருப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைபாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்க வாகனங்களின் முறையற்ற பாவனை தொடர்பில் 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சட்டவிரோதமான முறையில் அரச வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது குறித்து 38 முறைப்பாடுகளும், அரசாங்க கட்டடங்களை தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பயன்படுத்துதல் தொடர்பில் 19 முறைபாடுகளும் செய்யப்பட்டுள்ளன.