BREAKING NEWS

Sep 17, 2013

நாட்டில் 26 பள்ளி வாசல்கள் தாக்கப் பட்டுள்ளன - ரணில்


நாட்டில் 26 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டிருந்த போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மௌனமாகவே உள்ளார் என்று எதிர் கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அக்குறணை நகரில் நேற்று 2013 09 16 இரவு இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்ஏ.ஹலீம் தலமையில் இடம் பெற்ற இப் பிரச்சாரக் கூட்டத்தில் மேலும் உரையாற்றிய எதிர கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க,

அரசின் அடாவடித்தனங்களை மக்கள் பொருத்த காலம் முடிவடைந்துள்ளது. இனி மேலும் மக்கள் அரசின் இவ்வடாவடித்தங்களை பொருக்க தேவையில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைதரக் கூடிய அரசு ஒன்றை உருவாக்குவதங்கு நாங்கள் ஒன்று திரள வேண்டும். 1977 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வந்த போது நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டு நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவான போது ஆடைத் தொழிற் சாலைகள் அமைத்து கம்உதாவ போன்ற திட்டங்கள் மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு சென்றார். 2001 ம் ஆண்டு நான் பிரதமரான போது 'ரீகேனின்ங் ஸ்ரீ லங்கா' என்ற திட்டம் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றேன். ஆனாலும் இன்றய அரசாங்கத்திற்கு நாட்டை அபிவிருத்தி செய்ய திட்டம் இல்லை. 


இந்திய அரசு கடன் கொடுக்கின்றது கிளிநொச்சியிள் புகையிரதப் பாதையை நிர்மானிக்க கூறுகிரார்கள், சீன அரசு கடன் கொடுக்கினறது அவரகள் கூறுவதை செய்கின்றார்கள். ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று உண்டு ஆனால் அங்கு கப்பல்கள் வருவதில்லை. சூரியவவயில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்று உண்டு ஆனால் விளையாட்டுகள் அங்கு நடைபெருவது இல்லை. மத்தளையில் விமான நிலையம் ஒன்று உண்டு ஆனால் அங்கு விமானம் வருவதில்லை. நொரொச்சோலையில் மின் நிலையம் ஒன்று உண்டு ஆனால்அங்கு மின்சாரம் இல்லை. இது தான் அரசின் அபிவிருத்தி. பிரயோசனம் இல்லாததற்கு கடன் பெற்று மக்களை கடன் காரர்களாக்கிவுள்ள அரசு, நாளுக்கு நாள் பொருட்களின் விலைவாசியை அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

நாட்டில் 26 முஸ்லிம் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் இதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இங்கு வந்து அரசுக்கு எதிர்ப்பு காட்டி தனித்து வாக்கு கேட்கின்றனர். வென்றபின் மீண்டும் அரசுடன் இனைகின்றனர். மரமும் வெற்றிளையும் ஒன்றுதான். எனவே சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &