அமெரிக்கா பென்சல்வேனியா கால்பந்தாட்ட பயிற்சியாளரான மெட் பில்மன் வடக்கிற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.
ஜுலை 21 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 05 ஆம் திகதிவரை வடக்கில் அவர் தங்கியிருப்பதுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியளிக்கவுள்ளார்.
அவர், வடக்கில் சுமார் 500 பேருக்கு கால்பந்தாட்ட பயிற்சியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி, சமுகத்திறன், விளையாட்டுத்திறன் மற்றும் போசாக்கு நிறைந்த ஒரு பொதுவழியாகவே கால்பந்தாட்டத்தை அவர் இனங்கண்டுள்ளார்.
இவர் ஆபிரிகாவிலும் இவ்வாறான பயிற்சிகளை அளித்துள்ளதாகவும் அவருடன் இன்னும் சில பயிற்சியாளர்களும் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயிற்சிக்கு பின்னர் அவர் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
Jun 29, 2013
அமெரிக்க கால் பந்தாட்ட பயிற்சியாளர் வடக்கிற்கு விஜயம்
Posted by AliffAlerts on 09:19 in SL | Comments : 0