BREAKING NEWS

Apr 13, 2013

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது இளைஞர்கள் குழு தாக்குதல்!

யாழ். நல்லூர் ஆலய முன்றலில் பேராதனை பல்கலைகழக மாணவர்கள் மீது இன்று (13) காலை 11 மணியளவில் இனந்தெரியாத இளைஞர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. 

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு யாழில் இருந்து தெரிவான புதுமுக மாணவர்களுக்கும் பல்கலைகழக இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குமான சந்திப்பொன்று இன்று நல்லூர் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது. 

மாணவர்கள் தமக்கிடையில் கலந்துரையாடிக்கொண்டு இருந்த சமயம் அவ் இடத்திற்கு திடீரென வந்த இனந்தெரியாத இளைஞர் குழு அங்கிருந்த மாணவிகளை களைந்து செல்லுமாறு பேசியதுடன் மாணவர்களையும் அடித்து விரட்டியுள்ளனர். இதனால் ஒரு சில மாணவர்கள் காயமடைந்தனர். 

இச் சம்பவம் நடைபெற்ற ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் பல்கலைகழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மாணவர்களிடம் இச் சம்பவம் பற்றி கேட்டறிந்ததுடன் எதற்காக இப்படியான போது இடங்களில் உங்கள் சந்திப்புக்களை வைக்கின்றீர்கள். பேராதனை பல்கலைகழகம் கேட்டிருந்தால் நாம் யாழ் பல்கலைகழகத்தில் உங்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தந்திருப்போம் என கூறியதுடன், அவ் மாணவர்களுக்கு சில அறிவுரைகளையும் கூறி அவர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்லுமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &